
பொன்முடி மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவருடைய எம் எல் ஏ மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது. அந்தத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்திருப்பதால் பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். உடனடியாக அவரை அமைச்சராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.