தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று அவர் திடீரென அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.