இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.