தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாரல் மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.