தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ஒரு சில பகுதிகளில் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. அறிவுரை கூறியும் மாணவர்கள் தொடர்ந்து இவ்வாறு செய்வதால் போலீஸ் நிலையம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் புகார் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.