இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.

இது தொடர்பாக அரசு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடினார்கள்,தற்போது செல்போன் மூலமாகவே அனைத்தையும் திருடி விடுகிறார்கள் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியின் விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அவர், மோசடியான சாப்ட்வேர்களில் தான் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து வருகிறார்கள். லிங்க் என்றாலே அது ஆபத்துதான். எனவே பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.