விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு,  முழக்கம் பாடல் வெளியீட்டு  நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், எந்த ஒரு இயக்கமும் கொள்கை சார்ந்து இயங்க வேண்டும். பேசும் போது  சொன்னாங்க. நாய் மேல கல் எடுத்து அடிச்சா ஓடி போயிரும். நீங்க தேனீ கூட்டில் கல் எடுத்து அடிச்சீங்கன்னா. அது உங்களை திருப்பித் தாக்கும். ஏன் தேனிக்கு அந்த பண்பு இன்ஃபில்ட்டா இருக்கு? 

ஏன்னா அதுக்கு ஒரு நோக்கம் இருக்கு. அது ஒரு கூடு கட்டுது. எல்லாம் ஒன்னு சேர்ந்து பூவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தேன் எடுத்துட்டு, துளி துளியா கொண்டு சேர்த்து அடையில கட்டி வைக்குது.  அதை பாதுகாத்து வைக்க வேண்டிய பொறுப்பு அதுக்கு இருக்குது. அதனால் கூட்டை கலைப்பவனை தாக்குற கோபம் அதற்கு இருக்கு. அப்போ அது ஒரு அமைப்பாயிடுச்சு. நூற்றுக்கணக்கான. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து ஒண்ணுமேல் ஒன்னு ஏறி தான் இருக்கும். ஆனால் அதுக்குள்ளே ஒரு ஒற்றுமை இருக்கும். தேன்கூட பாத்தீங்கன்னா. ஒரு அடையா தேன் உள்ளே இருக்கும். அதுக்கு மேல அவ்வளவு தேனீக்கள் இருக்கும்.

அவ்வளவு தேனீக்களும் ஒரே வேலையை தான் செய்யுது. பூவிலிருந்து எடுத்துட்டு வந்த மகரந்த தேனை கொண்டு வந்து அந்த அறைக்குள்ளே பதுக்கி, பாதுகாத்து வைப்பது தான் அதோட வேலை, அதை பாதுகாக்கணும். அப்போ தேன் என்பது ஒரு இயக்கத்தின் கொள்கை, கோட்பாடு. கொள்கை கோட்பாடு இல்லன்னா ரிட்டனேஷனே வராது. ஒரு ஆர்கனைசனா இருந்தா தான் திருப்பி தாக்கனும்… பாதுகாக்கணும் என்ற பொறுப்பு வரும். இயக்கத்தை நேசிக்கணும்,  புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட மக்களை நேசிக்க வேண்டும். இதெல்லாம் சேர்ந்து தேனடைக்குள்ள சேர்ந்து இருக்க தேனீயை போன்று பொறுப்புணர்வு ஒரு இயக்கத்தின் இருக்கிற தோழர்களுக்கு வரும்.

இல்லன்னா எவனோ அடிக்கிறான்! எங்கேயோ தீ வைக்கிறான்! தலைமைக்கு  எதிரா விமர்சனம் நடக்குது. அத பத்தி எதுவுமே ரியாக்ஷன் பண்ணாம ஒருத்தன் இருக்கிறானா ? அவன் அந்த அமைப்புல கமிட் ஆகவில்லை என்று அர்த்தம். இல்லன்னா பதறும். ஒரு இயக்கத்தில் டேமேஜ் வருது. கட்சி தலைமைக்கு எதிரான டேமேஜ் வருது. நாம் பேசக்கூடிய கொள்கைக்கு எதிரான பாதிப்பு வருகிறது என்றால் மனசு பதறும் இந்தியா முழுக்க. தமிழ்நாடு முழுக்க ஒரே ரியாக்ஷன் வரும். ஒரு இயக்கத்துக்குள்ள அந்த மாதிரி ஒருத்தன் எதிர்வினை ஆற்றவில்லை என்றால்  எங்கேயோ ஒரு இடத்துல பிழை இருக்கு.

அவனுடைய நோக்கத்துக்காக தான் அந்த இயக்கத்தில் இருக்கானே தவிர, அவன்  “மக்களுக்காக இல்லை, கொள்கைக்காக இல்லை” அருமை தோழர்களே… அதனால்  அமைப்பாய் திரள்வோம் என்ற முழக்கம் அதிலிருந்து தான் எழுந்தது  அண்ணன் ஜவகர் கூட என்ன சொன்னார் என்றார் ?  இது ஒரு முழக்கமாக இருக்கு. ஏதாவது வேறு பெயர் சொல்லுங்கள். எதாவது கேப்ஷன்  மாதிரி தான் இருக்கே தவிர, ஒரு புத்தகத்துக்கான தலைப்பு மாதிரி இல்ல.  நான் அதுல காம்ப்ரமைஸ் ஆகல. அன்னே இப்படியே இருக்கட்டும். அமைப்பாய் திரள்வோம்ன்னு இருக்கட்டும்னு சொன்னேன். பிறகு அவரு ஒத்துக்கிட்டாரு. அண்ணன் என்ன சொன்னாரு…

எம்ஜிஆர்-ருக்கு இரட்டை இலைன்னு ஒரு சின்னம் அமைச்சது. அது  இயல்பாக ரெண்டு விரலை காட்ட அமைச்சு  போச்சு. எத்தனையோ பத்திரிகைல இருந்தாலும், எங்களுக்கு நக்கீரன் என்று பெயர் அமைந்தது பாருங்க. அந்த பெயரு அமைச்சதே ஒரு வாய்ப்பு. அந்த மாதிரி உங்களுக்கு அமைப்பாய் திரள்வோம் என்ற ஒரு முழக்கம் கிடைத்திருக்கின்றது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அப்படின்னு அவரு சொன்னாரு என தெரிவித்தார்.