கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், தனது நண்பர் நிஜாமுதினுடன் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றார்.
இருவரும் உணவை ஆர்டர் செய்து காத்திருந்தபோதும், வெகு நேரமாகியும் பணியாளர்கள் உணவு வழங்காததால், அப்துல் ஹக்கீம் கடும் கோபமடைந்தார்.
உடனே எதிர்பாராத விதமாக, வேலை முடிந்து நின்று கொண்டிருந்த உணவக ஊழியர்கள் மீது திடீரென காரை ஏற்றி மோத முயன்றார். இதில் அனைவரும் ஓடி உயிர்தப்பிய நிலையில், ஒருவர் மட்டும் காயமடைந்தார்.
சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்துல் ஹக்கீம் மற்றும் நிஜாமுதின் இருவரையும் போலீசார் கைது செய்தனர். உணவு தாமதத்தை காரணமாகக் கொண்டு ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தாக நடத்திய இந்த ஆபத்தான செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
