சமூக வலைதளங்களில் ஒரு டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ‘ஆஜாத்’ திரைப்படத்தின் ‘உய் அம்மா’ பாடலுக்கு மேடையில் அசத்தலாக ஆடிய ஒரு பெண், திடீரென தனது பாவாடையின் பின்னால் கழன்று விழுந்த போதிலும், பதறாமல் அந்த சூழலை அபாரமாக கையாண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரது தன்னம்பிக்கையையும், சமயோசிதமான செயல்பாட்டையும் பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 14 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், பாவாடை கழன்றவுடன் அந்த பெண் ஒரு கையால் அதை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் தனது நடனத்தை தொடர்ந்தார். பதற்றமோ, தயக்கமோ இல்லாமல், முழு தன்னம்பிக்கையுடன் தனது ஆட்டத்தை தொடர்ந்த அவரது அசாத்திய திறமை, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
“வேறு யாராக இருந்தாலும் வெட்கப்பட்டு நடனத்தை நிறுத்தியிருப்பார்கள், ஆனால் இவர் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்துவிட்டார்” என்று ஒரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். “பிரஷரில் சிறந்த பர்ஃபாமன்ஸ்!” என்று மற்றொருவர் புகழ்ந்துள்ளார். இந்த பெண்ணின் சாமர்த்தியமும், நேர்த்தியான அணுகுமுறையும், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளது.
