
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில் வந்த ஒருவர் பிருந்தா தேவியிடம் முகவரி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்தவர், பிருந்தா தேவியின் கழுத்தில் அணிந்திருந்த ஏழரைப் பவுன் தங்கம் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
அந்த மர்ம நபர் முகவரி கேட்பது போல் நடித்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிருந்தா தேவி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உடனே அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.