ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திடீரென சாமி வந்தது போல கையில் குங்குமத்தை வைத்து கொண்டு ஆடியுள்ளார்.

அப்போது அந்த பெண் நிறுவன ஊழியர்களை பார்த்து டிராக்டரை எடுத்து சென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சாபமிட்டுள்ளார். இதனை கேட்ட ஊழியர்கள் வண்டியை நாங்கள் எடுத்து செல்லாவிட்டால் எங்களின் வேலை போய்விடும் என கூறினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by अशोक भील भेमई हिंडोलिया (@ashokdamor864)