சமூக வலைதளங்களில் தினந்தோறும் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், நகைச்சுவை கலந்த ‘பிராங்க்’ வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், வாழைப்பழக் கடைக்காரர்களிடம் இளைஞர் ஒருவர் செய்த குறும்புத்தனமான செயல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தெருவோரம் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருக்கும் கடைக்காரரிடம் சென்று, மிகவும் சீரியஸாக “இங்கே ‘பனானா’ (Banana) எங்கே கிடைக்கும்?” என்று கேட்கிறார். அவர் முன்னால் விதவிதமான வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆங்கில வார்த்தையைக் கேட்டவுடன் கடைக்காரர் ஒரு நிமிடம் திகைத்துப்போகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by popper vishal (@poppervishalofficial)

பின்பு அந்த இளைஞரிடம், “பனானாவா? அது இங்கே கிடைக்காது, அப்படியே நேராகச் சென்றால் அடுத்த தெருவில் வேண்டுமானால் கிடைக்கும்” என்று மழுப்பலாகப் பதிலளிக்கிறார்.

அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்து அடுத்தடுத்த வாழைப்பழக் கடைகளுக்கும் சென்று இதே கேள்வியைக் கேட்கிறார். ஒரு கடைக்காரர் “அடுத்த முடுக்கில் கிடைக்கும்” என்றும், மற்றொருவர் “அடுத்த சந்தில் தேடிப் பாருங்கள்” என்றும் பதிலளிக்கின்றனர். தங்களுக்கு முன்னால் இருப்பதுதான் ‘பனானா’ என்பது தெரியாமல், அவர்கள் கொடுத்த ரியாக்ஷன்கள் பார்ப்போரை வயிற்றைக் குலுங்க சிரிக்க வைக்கின்றன.

இந்த வீடியோ ‘poppervishalofficial’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கடைக்காரர்களின் அப்பாவித்தனமான பதில்களையும், அவர்களின் முகபாவனைகளையும் பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.