அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாவை விமர்சனம் செய்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் அவன் வாங்கி கட்டிப்பான்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இன்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாதவர்.  பேரறிஞர் அண்ணாவின் புகழை சிறுமைப்படுத்த எந்த கொம்பன் நினைத்தாலும் அவன் தான் அழிந்து போவானே ஒழிய,  அண்ணா உடைய புகழை  அழிக்க முடியாது. ஸ்டாலின்  அப்பா பெயரில்  இங்கு ஒரு சில, அங்கு ஒரு சிலை என திரும்புன பக்கங்கள் எல்லாம்சிலை.

திரும்புன  திட்டத்துக்கு எல்லாம் அவங்க அப்பா பெயர். இப்போ  உங்க அப்பா பெயர் வைக்கிறீங்க. கருணாநிதி டாஸ்மார்க் என வச்சிக்கோங்க. அந்த வார்த்தைக்கே  மரியாதை இல்லாம போச்சு. அந்த மாதிரி  சர்வாதிகாரியாக ஆயிடுவேன்,  அடக்கிருவேன், ஒடுக்கிடுவேன். சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவேன், எல்லாத்தையும் தேடினும் பாலுமாக ஓட விடுவேன் அந்த அளவுக்கு பொய் சொல்கிறார் ஸ்டாலின்.

காளிமுத்து அண்ணன் சொல்லுவாரு ஒன்னு… கறந்த பால் மடிப்புகாது,  கருவாடு மீன் ஆகுமா ? ஆகாது. இது ரெண்டையுமே நடக்காத ஒரு சூழ்நிலையில் இனிமேல் திமுக ஆட்சி என்பது வராது. அதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய ஒவ்வொரு பொதுமக்கள்,  தொண்டர்களுடைய உணர்வு. கேடுகெட்ட ஜென்மம் யாருன்னா ஓபிஎஸ் தான்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  காட்டி கொடுக்கின்ற ஒரு துரோகியாக இருக்கின்ற ஓபிஎஸ் இதனை ரசிக்கிறார்.

ஒருத்தர் தாயை பழிக்கின்றார்  என்றால் ?  வெகுண்டுஎழ வேண்டாமா ? வெகுண்டுஎழாமல் அப்படியே ரசித்துக்கிறார். அப்படின்னா ஒவ்வொரு தொண்டனும் சரி,  ஓபிஎஸ்யை மன்னிக்க மட்டன். ஓபிஎஸ் துரோகத்திற்கு நிச்சயமாக மன்னிப்பே கிடையாது என தெரிவித்தார்.