தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கட்டாயம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதியான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருகே தோனுகால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அ

தில் பேசிய அவர் ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நடப்பாண்டு எல்லோருக்கும் எல்லாம் என்ற கருப்பொருளை கொண்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் . மேலும் தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை  விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.