பா.ரஞ்சித் சென்ற 2012 ஆம் வருடம் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த திரைப்படத்தில் தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை கவர்ந்தார் பா.ரஞ்சித்.

தற்போது அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஆதியன் ஆதிரை இயக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு தண்டகாரண்யம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் ஆனது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.