சமந்தா நடித்த திரையரங்கில் வெளியாக உள்ள படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வரலாற்றை கதை அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இப்படப்பிடிப்பு சமயத்தில் தான் சமந்தா மயோசிட்டிஸ் நோயின் தாக்கம் அவருக்கு உடலில் அதிகரித்தது. இருப்பினும் இப்படத்தில் சுமார் 30 கிலோ எடை கொண்ட உடையை அணிந்து சில காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான தங்க நகைகளை அணிந்து கூடுதல் பாரத்தோடு நடித்துள்ளார். அதுவும் கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த காட்சி எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது மூலம் சாகுந்தலம் படத்திற்காக சமந்தா நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் பல கஷ்டங்களை அனுபவித்து நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.