மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது. அதானி முறைகேடுகளில் நடந்ததா?, இல்லையா? என்பதை விசாரணை குழு நடத்தட்டும்.

அதுவரையிலும் பாராளுமன்றத்தில் சமர்பித்த பட்ஜெட்டை கூட விவாதிக்காமல் இருக்கின்றனர். உச்சநீதிமன்றம் கூட விசாரணை குழு அமைக்க முன்வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க முடியாத நிலை இருக்கிறது. சொத்துகுவிப்பிற்கும், மோடிக்கும் தொடர்பு இருக்கிறது. வடமாநிலத்தவர்கள் இல்லையெனில் தமிழகத்தில் தொழில்கள் நடத்த முடியாது. தமிழர்களும் வெளிமாநிலங்களில் வேலை பார்க்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.