‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’ என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என நேற்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.