செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, ADMK பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை மக்கள் அவர்களை விட்டு தேவையில்லாமல் போய்விட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சிறுபான்மை மக்கள் இவர்களோடு இருந்தார்கள்.அவர்களுக்கு திமுக மீது நாட்டம் இல்லை. சிறுபான்மையினரை  பொறுத்தவரையிலும் மோடிஜியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

ஆகவே அதிமுக மோடியை சேர்த்துக் கொண்டதினால் திமுக பக்கம் சென்றர்கள்.எட்டு மணிக்கு தேர்தல் தொடங்குகிற போது திமுக பெட்டியில் 12 ஓட்டு இருக்கிறது. அதிமுக பெட்டியில் சைபர். இவன்  88 வாக்குக்கு தான் போராடுகிறான்,  12 வாக்கு தானாக விழுந்து விடுகிறது. அவன் அப்படி அல்ல. இப்போது அந்த விழிப்பு அதிமுகவினரிடம் ஏற்பட்டிருக்கிறது.  ரொம்ப கேவலப்படுத்தி விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் இவனுக்கு கொஞ்சம் சொரணை வந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆக மொத்தம் பிரிந்தது,  பிரிந்ததுதான். இனிமேல் வேறு கட்சிகளுக்கு தான் குழப்பம் ஏற்படும். திமுகவுக்குள்ள பயம் என்னவென்றால்? நம்முடைய கூட்டணி கட்சிகள் இனிமே நெருக்கடியை கூட்டுவார்கள் என்பது தான்.  கூட்டணி கட்சிகள் இடம் கூட கேட்பார்கள், இல்லை என்றால் அங்கே போகிறேன் என்பார்கள் என தெரிவித்தார்.