
தமிழக அரசு தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மதுவை வாங்கி குடிக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் தானியங்கி மது வழங்கும் இயந்திரத்திற்கு இணையதளத்திலும் நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.