உலகக் கோப்பை போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது.

2023 உலக கோப்பையில் இன்று தங்களது முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதுகிறது. இந்த 2 அணிகளும் ஒருவரையொருவர் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிப் பாதைக்குத் திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த இரு அணிகளும் இப்போட்டியில் முதல் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள். இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மோசமான தோல்விகளை சந்திக்க வேண்டிய நிலையில், இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்தது.

5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 10 அணிகள் கொண்ட புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. அவர்களது நிகர ரன் ரேட் -1.846 ஆக உள்ளது. அதேபோல  -1.161 நிகர ரன் ரேட் விகிதத்துடன் இலங்கை 8வது இடத்தில் உள்ளது.  2023 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அக்டோபர் 16 ஆம் தேதி (இன்று) நடைபெறவுள்ளது. இலங்கை அணியில் தொடை காயம் காரணமாக கேப்டன் தசுன் ஷானகா உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக குஷால் மெண்டிஸ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

ஐசிசி உலகக் கோப்பை 2023 ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை இடையேயான ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டி எந்த மைதானத்தில் நடைபெற உள்ளது?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டி இந்தியாவின் லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையேயான போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் இலவசமாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா சாத்தியமான லெவன் :

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), பாட் கம்மின்ஸ் (கே), ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க்.

இலங்கை சாத்தியமான லெவன் :

திமுத் கருணாரத்ன, பதும் நிஸ்ஸங்கா, சரித் அசலங்கா, துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா, சமிக கருணாரத்ன, குஷால் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரம, ரஜிதா, மதீஷ பத்திரனா, மஹிஷ் தீக்ஷனா.