பீகார் மாநிலம் பங்காவில் சிவம் குமார், பூனம் குமாரி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆகாஷ் குமார்(10) மற்றும் ரிஷி குமார்(8) என்ற 2 மகன்கள் பிறந்துள்ளனர். முதலில் சாதாரணமாக இருந்த திருமண வாழ்க்கை பிறகு மாறத் தொடங்கியது. அதாவது பூரியா டியாரா கிராமத்தில் வசிக்கும் பூனமின் உறவினர் அங்கித் குமார் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வர தொடங்கினார். படிப்படியாக பூனத்துக்கும், அங்கித்துக்கும் இடையே உறவு ஆழமடைந்தது. 2 நாட்களுக்கு முன்பு பூனம் திடீரென இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து காணாமல் போனார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடிச் சென்ற சிவம் திங்கட்கிழமை ஒரு படத்தை கண்டுபிடித்தார். அது அவரை திகைத்து போகச் செய்தது. சிவமின் மொபைல் போனுக்கு பூனம் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில் அவர் கோவிலில் அங்கீத்தை திருமணம் செய்து கொள்வது போன்று இருந்தது. மேலும் தான் அங்கித்தை திருமணம் செய்து கொண்டதாக அவர் செல்போனில் தெரிவித்துள்ளார். இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்று அவர் காவல்துறையினரிடம் அழுது கெஞ்சி உதவி நாடி உள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
