
இபிஎஃப்ஓ நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் அதிக பென்ஷன் பெறுவதற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்கள் அதிக பென்சன் பெறுவதற்கு சமர்ப்பித்த விண்ணப்பம் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் ஒத்துப் போகவில்லை எனில் அதை சரி செய்து கொள்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு அதிக பென்சன் பெறுவதற்கு கூட்டு விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தால் அந்த விண்ணப்பத்தை இபிஎப்ஓ அலுவலகங்கள் ஆய்வு செய்யும்.
இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு நிலுவை கணக்கிடப்பட்டு அதை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக இல்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஊழியருக்கு தகவல் கொடுக்கப்படும். அதன்பின் தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு மாதம் கால அவகாசமும் கொடுக்கப்படும். இதேப்போன்று நிறுவனம் சமர்ப்பித்த விவரங்கள் முழுமையாக இல்லாவிடிலும், ஏதேனும் தவறு இருந்தாலும் அதை சரி செய்து கொள்வதற்கும் ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்படும். மேலும் இந்த கால அவகாசத்திற்குள் தவறுகள் சரி செய்யப்பட்டு விட்டால் நிலுவைத் தொகை செலுத்துவதற்கு உத்தரவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.