கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்., வேட்பாளர்  வினய் குமார்  சொர்கி தெரிவித்தார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றார். அதன்பேரில், அண்ணாமலையின் அறை, வாகனங்கள், அவர் வந்த ஹெலிகாப்டர் என அனைத்தையும் தேர்தல் அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின் பேசிய தேர்தல் அதிகாரி சீதா, விதிகளை மீறும் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என கூறினார்.

கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் பணம் எடுத்து சென்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘KGF படத்தில் கோல்டு மைனில் கிடைத்த பணத்தை ஏழை மக்களிடம் கொடுப்பது போல, ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு சென்று ஏழை மக்களிடம் நான் கொடுக்கப்போகிறேன். இதுதான் ‘KGF3′ கதை. நானும் ராக்கி பாயும் சேர்ந்து தான் கதையை எழுதிக்கொண்டு இருக்கிறோம்’ என்றார்.