தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏன் மது பாட்டில்களை திரும்பப் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது மலைப் பிரதேசங்களில் மது வாங்கும்போது 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொண்டு பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் 10 திருப்பி அளிக்கப்படுகிறது. மலை பிரதேசங்களில் மட்டும்தான் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, மேகமலை, ஏலகிரி உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களிலும் தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் மது பாட்டில்களை கீழே போடுவதால் சுற்றுசூழலுக்கு கேடு ஏற்படும் என்பதால் மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் கொடுக்கும் திட்டமானது கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.