திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம். இதற்காக சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தில் சிறப்பு அனுமதி பெற்று பொது இடங்களில் மதுபானங்களைப் பரிமாறலாம் என்ற அரசின் அரசாணை அறிவிப்பு மிகவும் வேதனை அளிக்கிறதென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டிருக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். முழு மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்றார்.