திருவண்ணாமலையில் கடந்த 4 ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் மூன்று லட்சம் பணத்தை கைப்பற்றுவதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளியாக செயல்பட்டு முக்கிய நபரான அஜித் தமது கூட்டாளி ஆரிப் ஆகியோரை போலீசார் ஹரியானாவில் வைத்து கைது செய்தது. இதற்கடுத்து கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதியில் இரண்டு பேரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் முதல் இரண்டு பேரை கைது செய்த தனிப்படையினர் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பரிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 73 லட்சம் ரூபாயில் சிறப்பு தொகை மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். இதில் பிரதானமாக இருப்பது பணம் எங்கே ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பது என்பது கேள்வியாக இருக்கின்றது என்று கூறப்படுகிறது. அவர்கள் எங்கே கைமாற்றினார்கள் என்ற தகவலில் இருக்கம் காட்டுவதாகவும் விரைவில் மீதமுள்ள பணத்தை கைப்பற்றி விடுவோம் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.