சேலம் அருகே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய ராட்சத அளவிலான சூழலும் தலைக்கவசம் மாதிரியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். சாலை விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத அளவிலான சுழலும் தலைக்கவசம் மாதிரி விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்போதுதான் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.