நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவில் அன்பழகன் என்பவருடைய மகன் பாலாஜி என்பவர் வசித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு வேதாரண்யம்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.