
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளர் ஆவார். இவர் தங்களுடைய வீட்டில் சம்பவ நாளில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டவுடன் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக பிச்சைக்கனி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.