தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் பாலிவுட் சிட்டாடல் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வயதில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மார்டன் உடையில் பிளாக் அண்ட் ஒயிட் ஆக இருக்கும் சமந்தாவின் அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.