மிதுனம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். உத்தியோகத்தில் சற்று சிரமத்தை எடுத்து உழைப்பு வேண்டி இருக்கும். வீட்டு வேலைகளை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக பேச வேண்டும். கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பெண்கள் ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள். வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அனைவரிடத்தும் நல்ல பெயரை எடுப்பீர்கள். பெண்கள் உழைப்பால் உயர்வீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படித்ததை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.