மேஷம் ராசி அன்பர்களே..!
சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள்.

நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாத பேச்சை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.