கன்னி ராசி அன்பர்களே..!
இன்று வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

இன்று அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும்.
சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் உங்களை நம்புவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடவேண்டும். அதிகப்படியான கடன்கள் வாங்க வேண்டாம். உணவு வகையில் கட்டுப்பாடு தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.