ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று அனைவரிடமும் நிதானமாக பேசுவது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில்தான் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். வெகுநாட்களாக வேங்கை வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை இன்று வாங்குவீர்கள். மனை மற்றும் வீடு வாங்கும் முயற்சிகள் சற்று தாமதமாகதான் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

திருமண முயற்சிகள் ஓரளவிற்கு கைகூடும். தடைப்பட்ட பணவரவு தடையின்றி கைக்கு வந்துச்சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவு சரியாகி மனதில் அன்பு குடிகொள்ளும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு நிதானப் போக்கு வெளிப்படும். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றமான சூழல் அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியுங்கள், வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறியளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் மிகவும் முன்னேற்றகரமான இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.