கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும்.

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் கொள்வீர்கள். தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். தெய்வ பக்தியுடன் காரியத்தை எதிர்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் கைகூடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.