சிம்மம் ராசி அன்பர்களே..!
விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும்.

பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும்.

நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சேமிப்பு தேவை. மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். எந்தவொரு காரியத்தையும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். தீர ஆலோசனை செய்து எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுங்கள். திட்டமிட்டு பொறுமையுடன் செயல்களை மேற்கொள்ளுங்கள். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.