மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர் அந்த ரயிலில் ஏறி சோதனை நடத்திய போது சந்தேகப்படும்படி ஒரு நபர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அவரிடம் சோதனை நடத்திய போது கிட்டத்தட்ட 12.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர் பறிமுதல் செய்த கஞ்சாவை மதுரை மாநகர் மதுவிலக்கப் பிரிவு உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.