பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தாம்பரம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயது பெண், ரயில் பயணத்தின் போது, 33 வயது கொண்ட நபர் ஒருவர்,  பரங்கிமலையில் நிலையத்தில் மின்சார ரயிலில் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.மேலும்  அந்த பெண்ணை தனது போனில் போட்டோ பிடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து தனது பாதுகாப்பிற்காக அந்தப் பெண்ணும் அத்துமீறலில்  ஈடுபட்ட நபரை தனது மொபைலில் படம் பிடிக்க தொடங்கியுள்ளார். பின் பல்லாவரம் ரயில் நிலையம் வந்ததும், கருணாகரன் தப்பியோடினார், இதனால் பாதிக்கப்பட்டவர் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீடியோ ஆதாரங்களின் உதவியுடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்,

அவரது அடையாளம் தெரியவந்தன, அதில் அவர் பெயர் கருணாகரன் என்பதும்  சட்ட ஒழுங்கு காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்காக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காப்பற்ற வேண்டிய காவல் துறை அதிகாரியே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.