கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர் அழைத்ததாக கூறி தன்னுடன் வரும்படி கோவிந்த்ஜியை வஞ்சகர் கூட்டிச்செல்ல, காரில் இருந்த கோவிந்த்ஜியின் பெண் தோழியிடம் இருந்து மற்றொரு போலி அத்ஹிகாரி 2 சவரன் செயின் மற்றும் ஐந்தரை கிராம் மோதிரத்தை திருடி கொண்டு போலி அதிகாரிகள் தப்பியோடினர்.

இதையடுத்து  காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புறநகர் பகுதிகளில் குற்றங்கள் அதிகரித்து வரும்  போக்கை காட்டுகிறது, அங்கு தனிநபர்கள், போலீஸ் போல் காட்டிக்கொண்டு, அப்பாவி மக்களிடம் மிரட்டி  பணம் மற்றும் நகைகளை பறிக்கும் செயல் அதிகமாகியுள்ளதால்,  தாம்பரம் துணை கமிஷனர் தலையிட்டு, தனிப்படை அமைத்து, போலீஸ் என பொய்யாக கூறி, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.