கள்ளப் பணப் புழக்கத்தில் ஈடுபட்ட பல நபர்களை தொடர்ந்து கைது செய்த தொடர் நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்காணலாம்.  

  1. வியாசர்பாடி சாமியார்தோப்பு பகுதியை  சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் எண்ணுார் நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

2.இரண்டு நாட்களுக்கு முன்  ராஜேந்திரன் கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்து சில பொருட்களை வாங்கி கொண்டு  200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அது கள்ள நோட்டு என வாங்கிய சில வினாடிகளில் உணர்ந்தார் ராஜேந்திரன். 

  1. இதையடுத்து , பொதுமக்கள் உதவியுடன் மர்ம  நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார் ராஜேந்திரன்.
  1. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கைது செய்யப்பட்ட நபர் யானைக்கவுனி பகுதியை சேர்ந்த முகமது இட்ரூஸ் என்பதும், வால்டாக்ஸ் சாலையில் குளிர்சாதனப்பெட்டி  கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

5.இவர்  திருவொற்றியூரைச் சேர்ந்த தனது நீண்ட நாள் பள்ளி நண்பனான முஹம்மது யூனுஸ் -ன் தந்தை  முகமது உசேன் – யிடம் ரூ.2,000 செலுத்தி, கடந்த வாரம் ரூ.4,000 மதிப்புள்ள போலி 200 ரூபாய் நோட்டை வாங்கி அதை வெற்றிகரமாக புழக்கத்தில் விட்டுள்ளார்.

  1. பின் மீண்டும் முகமது உசேன்-யிடம்  ரூ.5,000 செலுத்தி 10,000 ரூபாய்க்கான   போலி 200 ரூபாய் நோட்டுகளாகப் பெற்றார். இதையும் கிட்டத்தட்ட புழக்கத்தில்விட , கடைசி  6  200 ரூபாய் போலி நோட்டுகளை மாற்றும் போது வசமாக சிக்கிக்கொண்டார். இதையடுத்து விசாரணையின் அடிப்படையில் மும்மது உசேன் மற்றும் அவரது கூட்டாளி பசுலுதீன் (60) ஆகியோரை காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.