தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை ட்விட்டரில் தொடங்கியுள்ளனர். இதனிடையே இன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி, அடுத்தடுத்த நிமிடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

வாரிசு ட்ரெய்லர் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் #VarisuTralier, #Vamshipaidipally, #Varisupongal2023, #VaaThalaivaa போன்ற ஹாஸ்டாக்களை பதிவிட்டு டிரெண்டு செய்து வருகின்றார்கள். முன்னதாக அஜித்தின் துணிவு திரைப்பட ட்ரெய்லர் வெளியாகிய ஒரு மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள். துணிவு பட ட்ரெய்லர் சாதனையை தற்போது வாரிசு படத்தின் ட்ரெய்லர் ஓவர் டேக் செய்ததை விஜய் ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CoimbatoreFish/status/1610644597394542592