தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை ட்விட்டரில் தொடங்கியுள்ளனர். இதனிடையே இன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி, அடுத்தடுத்த நிமிடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

வாரிசு ட்ரெய்லர் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் #VarisuTralier, #Vamshipaidipally, #Varisupongal2023, #VaaThalaivaa போன்ற ஹாஸ்டாக்களை பதிவிட்டு டிரெண்டு செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய மூன்று நிமிடங்களிலேயே 100K பார்வையாளர்களை பெற்றது. துணிவு ட்ரைலர் வெளியான 5 நிமிடங்களில் தான் 100K பார்வையாளர்களை பெற்றது.

வாரிசு ட்ரைலர் ஆறு நிமிடங்களிலேயே 200K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 12 நிமிடங்களில் தான் 200K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 11 நிமிடங்களிலேயே 300K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 23 நிமிடங்களில் தான் 300K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 16 நிமிடங்களிலேயே 400K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 37 நிமிடங்களில் தான் 400K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 23 நிமிடங்களிலேயே 500K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 58 நிமிடங்களில் தான் 500K பார்வையாளர்களை பெற்றது.

வாரிசு ட்ரைலர் 32 நிமிடங்களிலேயே 600K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 1மணி நேரம் 30 நிமிடங்களில் தான் 600K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 43 நிமிடங்களிலேயே 700K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 2 மணி நேரம் 23 நிமிடங்களில் தான் 700K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 57 நிமிடங்களிலேயே 800K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 3 மணி நேரம் 55 நிமிடங்களில் தான் 800K பார்வையாளர்களை பெற்றது. வாரிசு ட்ரைலர் 72 நிமிடங்களிலேயே 900K பார்வையாளர்களை பெற்றது. ஆனால் துணிவு ட்ரைலர் 3 மணி நேரத்தில் தான் 900K பார்வையாளர்களை பெற்றது.  மேலும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை வாரிசு ட்ரைலர் 89 நிமிடங்களிலேயே பெற்றது. ஆனால் துணிவு பட டிரைலர் 15 மணி நேரம் 11 நிமிடங்களில் தான் பெற்றது. இதனை ரசிகர்கள் ஆதாரத்துடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.