இன்றைய காலக்கட்டத்தில் ரீல்ஸ் மோகம் என்பது இளைஞர்களிடையே ஒரு போதை போலவே மாறிவிட்டது. பிரபலம் அடைய வேண்டும் என்ற ஆசையில், தனது உயிரையே பணையம் வைத்து இளைஞர் ஒருவர் செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு வாலிபர் தனது சட்டையில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். அடுத்த சில நொடிகளில் தீ மளமளவெனப் பரவி அவரது நெஞ்சுப் பகுதியைச் சுடத் தொடங்குகிறது.

பதறியடித்துக் கொண்டு சட்டையைக் கிழித்து எறிந்தாலும், அதற்குள் அவரது நெஞ்சில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டன. உடல் கருகி வடுக்கள் ஏற்பட்ட பிறகும், அந்த நபர் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோவுக்காக ‘பெர்பாமன்ஸ்’ செய்ததுதான் வேதனையின் உச்சம்.

“புகழுக்காக இப்படியா உடலைச் சிதைத்துக் கொள்வது?” என இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்த வாலிபரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது வெறும் பொழுதுபோக்கு அல்ல, ஒரு மனநோய் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.