புற்றுநோயின் வகையைப் பொறுத்து அறிகுறிகள் மாறினாலும், முதல் நிலையில் தென்படும் பொதுவான அறிகுறிகள் இதோ:

திடீர் கட்டிகள்: மார்பு, கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு பகுதிகளில் புதிய வீக்கம் அல்லது கட்டிகள் தென்பட்டால் உஷாராகுங்கள். வலி இல்லாவிட்டாலும் பரிசோதிப்பது நல்லது.

சரும மாற்றங்கள்: மச்சங்கள் நிறம் மாறுவது, அளவு அதிகரிப்பது அல்லது தோலில் திடீர் சிவப்பு புள்ளிகள் மற்றும் கரடுமுரடான திட்டுகள் தோன்றுவது தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

திடீர் எடை இழப்பு: டயட் அல்லது உடற்பயிற்சி செய்யாமலே 5 முதல் 10 கிலோ வரை உடல் எடை குறைந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.

தீராத சோர்வு: எவ்வளவு ஓய்வெடுத்தாலும் சோர்வு நீங்காமல், உடல் மிகக் கடுமையாக உழைத்ததை போன்ற உணர்வு இருந்தால் கவனம் தேவை.

தொடர்ச்சியான வலி: எலும்புகளில் வலி அல்லது வயிற்றில் காரணமே தெரியாமல் அடிக்கடி அசௌகரியம் ஏற்படுவது புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாம்.

செரிமானப் பிரச்சனைகள்: மலச்சிக்கல், வீக்கம், உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு.

அசாதாரண ரத்தப்போக்கு: இருமும்போது ரத்தம் வருதல், மலம் அல்லது சிறுநீரில் ரத்தம், பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவை ஆபத்தானவை.