வேர்க்கடலை பூமிக்குள் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரமாகும். மாமிசம், முட்டை, காய்கறிகளை விட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம். மேலும் இதனை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, பிராங்கட்டீஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் குணமும் இதற்கு உள்ளது என்று சொல்லப்படுகிறது. வேர்க்கடலையை வெல்லத்துடனும் ஆட்டு பாலுடனும் சேர்த்து சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கும் கருத்தரித்துள்ள பெண்களுக்கும் தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து என கூறப்படுகிறது.

பல தொற்று நோய்கள், ஹைபோடைஸ், காசநோய் ஆகியவற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள நமக்கு எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது. ஹீமோஃபிலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனை குணப்படுத்தவும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும் நீரழிவு நோயாளிகளுக்கும் வேர்கடலை சிறந்த உணவாகும் என கூறப்படுகிறது.