நம்மில் பலர் வேலைப்பளு காரணமாக காலை உணவை தவிர்த்து விடுகிறோம். பள்ளி மாணவர்கள் முதல் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் வரை இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கில் உணவை மறந்து ஓடுகிறோம். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க முடியாமல் போகின்றன. இது சம்பந்தமான ஆராய்ச்சி எகிப்தில் உள்ள மருத்துவ துறையில் நடந்தது. இந்த ஆராய்ச்சி முடிவில் காலை உணவை தவிர்ப்பது நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதில் சிக்கல் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இதனால் இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. இந்த ஆராய்ச்சியில் முன்னணி எழுத்தாளர் மற்றும் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் இது குறித்து சிறு தகவல் கூறியுள்ளார். காலை உணவை தவிர்ப்பது, விரதம் எடுப்பது போன்றவை ஆரோக்கியமானது என்று விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மேலும் விரதத்தின் நன்மைகளுக்கு ஏராளமான சான்றுகளும் உள்ளது. உணவை தவிர்ப்பதால் பாதிப்பும் ஏற்படலாம் என எச்சரிக்கையும் அளிக்கின்றனர்.