
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எந்தெந்த மாநிலங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக கட்சி வெற்றி பெறுமோ, அங்கெல்லாம் இந்த காரியத்தை செய்றீங்க. நான் கேட்கிறேன்…. பாரதிய ஜனதா ஆளுகின்ற ஒரு மாநிலத்திலையாவது இந்த ரெய்டு நடந்து இருக்கா ? ஏன் நீங்க எல்லாம் உத்தமபுத்திரர்களா ? உங்ககிட்ட ஒண்ணுமே இல்லையா?
திமுக வந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்தாத காரணத்தினால் சென்னை முழுவதும் போராட்ட களமாக மாறி இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி,
சென்னை சிங்கார சென்னையாக காட்சியளிக்கிறது. சென்னை நன்றாக தான் இருக்குது. இப்ப நான் நாலஞ்சு தெருக்கள் வழியா தான் வந்தேன். தெருக்களெல்லாம் நல்லாதான் இருக்கு. எங்கயுமே போராட்டம் நடக்கல. போராட்ட களமா எங்கேயும் தெரியல. மணிப்பூர்ல தான் போராட்டக் களமாக இருக்கு. ஒரு சமயம் பிஜேபி தலைவர் அங்க போயிட்டு வந்து, அந்த ஞாபகத்துல இதை சொல்றாரா ? என்னனு எனக்கு தெரியல, இங்க நல்லா தான் இருக்கு என தெரிவித்தார்.