தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். “தீபாவளி பண்டிகை ஒளி இருளை வெல்வதையும், நல்லது கெட்டதை வெல்வதையும் குறிக்கிறது. இந்த பண்டிகை மக்களின் இதயங்களிலும் ஒற்றுமையையும், அமைதியையும் வளர்க்கட்டும்,” என அவர் பதிவு செய்துள்ளார்.

ஆனால், ஷெரீப்பின் இந்த பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். “பாகிஸ்தானில் இன்னும் ஹிந்துக்கள் உயிருடன் உள்ளார்களா?”, “அங்கு தினமும் கோயில்கள் அழிக்கப்பட, ஹிந்துக்கள் மீது வன்முறை நடக்கிறது… இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தீபாவளி வாழ்த்துகள்? இது ஏளனமல்லவா?” என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து, கிறிஸ்தவர்கள் மீது நீண்டநாள் ஒடுக்குமுறையும், மதமாற்றம் திணிப்பும் நடந்து வருவதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், பிரதமர் ஷெரீப் கூறிய “அமைதி, சகோதரத்துவம்” குறித்த வார்த்தைகள் வெறும் நாடகம்தான் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இதனால் ஷெரீப்பின் தீபாவளி வாழ்த்து தற்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.