தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மொத்தம் 402 பேருந்துகள் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் சேலம் போக்குவரத்து கழகத்துக்கு 303 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 347 பேருந்துகளும், கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு 115 பேருந்துகளும், மதுரை போக்குவரத்து கழகத்துக்கு 251பேருந்துகளும் வாங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோருவதற்கு கால அவகாசமானது வழங்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களை பெற http://www.tenders.tn.gov.in/ எனும் இணையதளத்துக்கு சென்று அறிந்துக்கொள்ளலாம்.